» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சேதமடைந்த பாரதியார் சிலையை சீரமைக்க வேண்டும் : மாநகராட்சி நிர்வாகத்திடம் அனைத்து கட்சிகள் மனு.

வெள்ளி 20, செப்டம்பர் 2019 6:54:19 PM (IST)நெல்லை சந்திப்பில் உள்ள தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரின் சிலையை சரிப்படுத்தி தர கோரி மாநகராட்சி ஆணையரிடம் அனைத்து கட்சிகள் மனு கொடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் விஜயலட்சுமியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சுடலைராஜ் ,காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் கே.சங்கரபாண்டியன்,மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம் , விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது-

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகத்தான பங்கினை வகித்த தேசியக்கவி மகாகவி பாரதியார் திருவுருவச் சிலை நெல்லை சந்திப்பில் உள்ளது. சிலை வளாகம் பல்வேறு சமூக விரோதிகளால் சேதமடைந்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று பாரதியார்  சிலையை செப்பனிடுவதோடு, வளாகத்தையும் சீர்படுத்தவும், வளாக கேட்டில் உள்ள விளம்பர பலகைகளை அப்புறப்படுத்த வேண்டுகிறோம். 

மின்விளக்குகள் பொருத்த வேண்டுகிறோம். விடுதலைப் போராட்ட தியாகிகளை போற்றுவதும் அவர்தம் சிலைகளை உரிய முறையில் பராமரிப்பும் தேசபக்த கடமை ஆகும். சிலை வளாகத்தை தொடர்ந்து பராமரிக்க உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமெனவும் நெல்லை மாவட்ட மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். 

இதற்கென மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்பதையும் தெரியப்படுத்துகிறோம் ,இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு கூறப்பட்டு இருந்தது.மனு கொடுக்கும் போது சி.பி.எம் தோழர்கள் ஸ்ரீராம்,பன்னீர்,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சொக்கலிங்ககுமார் ,ராஜேஷ் முருகன்,மதிமுக விஜயகுமார் பாக்கியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory