» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

வெள்ளி 20, செப்டம்பர் 2019 8:05:12 PM (IST)

ஆலங்குளம் அருகே அரசு பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலியானார்.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள செல்லதாயார்புரத்தை சேர்ந்தவர் காசி பாண்டியன்(வயது 55). இவர் ஆலங்குளத்தை அடுத்த வட்டாலூர் விலக்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பெட்ரோல் பங்க் அருகே தனியார் மில் ஒன்று உள்ளது.இந்நிலையில் இன்று அதிகாலை வேலையை முடித்துவிட்டு மில் அருகிலுள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று காசி பாண்டியன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. 

இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்க முயற்சித்தனர். அப்போது அக்ரோ மில்லில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவை போலீசார் ஆய்வு செய்கையில் கேமிராவில் காசி பாண்டியன் மீது தென்காசியிலிருந்து நெல்லை நோக்கி சென்ற அரசு  பேருந்து மோதிய காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தது. உடனே ஆலங்குளம் போலீசார் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கொண்டு நெல்லை அரசு போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவித்தனர். 

இதற்கிடையே பேருந்தை அதன் ஓட்டுனர்,ஆலங்குளம் காவல்நிலையத்திற்கு ஓட்டிச்சென்றார்.அதன்பின் நடைபெற்ற விசாரணையில் பேருந்து ஓட்டுனர் தென்காசி ஆசாத் நகரை சேர்ந்த முருகன்(33) என்பதும், கண்டக்டர் தென்காசியை சேர்ந்த நாராயணன் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் டிரைவர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory