» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் மாயம்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 8:19:29 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பள்ளி மாணவர்கள் 2 பேர் மாயமானார்கள்.

கல்லிடைக்குறிச்சி அயன்சிங்கம் பட்டியில் புனித மிக்கேல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மணி( 13) என்ற மாணவன் 8வது வகுப்பும், மூர்த்தி(12) என்ற மாணவன் 7வது வகுப்பும் படித்து வருகின்றனர். தமிழக அரசின் அரசு விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளனர். மாணவர்கள் இருவரும் நேற்று மாலை 3 மணிக்கு பள்ளி முடிந்ததும் மணிமுத்தாறு செல்லும் பேருந்தில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவரும் வெகுநேரமாகியும் விடுதிக்கு திரும்பவில்லை. இதனால் பள்ளி நிர்வாகம் கல்லிடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தது.இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory