» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூடங்குளம் அருகே கேரளா தொழிலாளி தற்கொலை

சனி 21, செப்டம்பர் 2019 12:03:28 PM (IST)

கூடங்குளம் அருகே கேரள தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (57). இவர் கடந்த சில ஆண்டுகளாக கூடங்குளத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் யார்? எங்கு இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை.இந்நிலையில் சம்பவத்தன்று ஜீவானந்தம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்ன காரணம்? என்று தெரியவில்லை.இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜவான், கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory