» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம்

சனி 21, செப்டம்பர் 2019 12:30:50 PM (IST)
தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியினை தக்கலை மறைமாவட்டம் ஆயர் ஜார்ஜ் இராஜேந்திரன் தலைமை ஏற்று கொடியினை ஏற்றி வைத்தார். அகரகட்டு பங்கு பணியாளர் எட்வின் ராஜ் பாளை மறை மாவட்ட செயலகம் முதல்வர் அந்தோணி குரூஸ் தூத்துக்குடி ஜெரோசின் கருத்தபிள்ளையூர் பங்கு பணியாளர் அந்தோணி வியாகப்பன் திருப்பலி நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி பங்குத்தந்தை சகாய சின்னப்பன் உதவி பங்கு தந்தை லூர்து மரிய சுதன் அகரகட்டு அந்தோனிவியாகப்பன் கார்வின் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த திருவிழாமுன்னிட்டு   தினமும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு பங்கு தந்தையர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி மறையுரை நற்கருணை ஆசீரும் நடைபெற உள்ளது. 23ஆம் தேதி உணவு ஒன்றிப்பு நிகழ்வும் 24ஆம் தேதி பல்சமய உரையாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் 25ஆம் தேதி கிறிஸ்தவ ஒன்றிப்பு விழாவும் நடைபெற உள்ளது.

27 ஆம் தேதி காலை 6 மணிக்கு கும்பகோணம் அருளப்பன் தலைமையில் மறையுரை, 10 மணிக்கு பட்டாக்குறிச்சி குருமடம் ஆண்டனி வர்கீஸ் ரோச்சா  தலைமையில் மறையுரை மலையாள திருப்பலி,  பாளை  ஆயர் இல்லம் லூர்து ராஜ் மறையுரை ஆவுடையானுர் பங்கு பணியாளர் தேவராஜன் நற்கருணை நடக்கிறது. கதிர் பாத்திரம் தாங்குகிறார் வல்லம் பங்கு பணியாளர் ஆரோக்கியராஜ் நற்கருணை ஆசீர் நற்கருணை பவனி நடைபெற உள்ளது.28 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பட்டாக்குறிச்சி குருமட அதிபர் ரினோய் கட்டிப் பரம்பில் தலைமையில் மறையுரை நடக்கிறது. மாலையில் பாளை புனித சவேரியார் கலைமனைகள் அதிபர் ஹென்றி ஜெரோம்  தலைமையில் மறையுரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை உயர்படிப்பு தீபக் மைக்கேல்ராஜா தேரை அர்சிக்கிறார். அதனைத் தொடர்ந்து இரவில் புனித மிக்கேல் அதிதூரின் தேர்பவனி நடைபெற உள்ளது.

29 ஆம் தேதி அதிகாலை 4.30  மணிக்கு கர்நாடகா குல்பர்கா மறைமாவட்டம் அந்தோணி செல்வம் தலைமையில் புனே செல்வராஜ் மறையுரையும்.காலை 5.45 மணிக்கு மறைமாவட்ட தொடர்பாளர் சேவியர் தலைமையில் மறையுரையும் காலை  7.30 மணிக்கு சென்னை-மயிலை உயர்மறை மாவட்டம் முன்னாள் மேயர் சின்னப்பா தலைமையில் மரையுரை. காலை 9.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு வின்சன்ட் டிக்ருஸ் தலைமையில் கேரள திருப்பலியும்.அன்று பிற்பகல் 12 மணிக்கு தூத்துக்குடி ஜோசப் தலைமையில் குணமளிக்கும் நற்கருணை வழிபாடீடு திருப்பலியும். மாலை 6 மணிக்கு மின்நகர்  அமல்ராஜ் புளியங்குடி அருள்ராஜ் தலைமையில் மார்ட்டின்  மறையுரை நடத்துகின்றனர். 

30 ம்  தேதி ஜோசப் தலைமையில் சுந்தர் மறையுரை நடத்தி  கொடியிறக்கம் நடைபெற உள்ளது இந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குதந்தை சகாய சின்னப்பன் உதவி பங்குத்தந்தை லூர்து மரிய சுதன் அமலவை அருட்சகோதரிகள் பங்கு பேரவை அன்பிய இறை சமூகம் ஆகியோர்செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory