» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் : நெல்லை ஆட்சியர் வேண்டுகோள்

சனி 21, செப்டம்பர் 2019 1:44:11 PM (IST)

அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகஅரசின் திட்டத்தின் கீழ் கண்தானம் பெற்று பயனடைந்த  231 நெல்லை பயனாளிகள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.தமிழகஅரசின் திட்டத்தின் கீழ் கண்தானம் பெற்று  நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பயனடைந்த 231 பயனாளிகள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆனந்த கண்ணீருடன் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்ததாவது,ஒருவர்  இறந்தவுடன் அருகில் உள்ள கண் வங்கிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்தவுடன் கண்கருவிழிகளை கண் இரைப்பைகளைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். அந்த அறையில் மின் விசிறியோ அல்லது குளிர்சாதன வசதியோ இருந்தால் நிறுத்தி விட வேண்டும். 

ஒருவர் இறந்து ஆறு மணி நேரத்திற்க்குள் கண்கள் அகற்றப்பட வேண்டும். ஆகையால் கண் வங்கிக்கு இறந்தவுடன் தகவல் தெரிவிப்பது அவசியம். கண் தானம் செய்வதால் முகம் விகாரம் அடைவதில்லை.ஒருவர் கண்தானம் செய்வதன் மூலம் இரண்டு பேர் பார்வை பெற முடியும்.மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் வங்கி சார்பில் கண்தான இருவாரவிழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு கண்தானம் சம்பந்தமான பலவிதமான கலை போட்டிகள் நடத்தப்பட்டன. 

2019 ஆகஸ்டு 30ம் தேதி அன்று கண்தான விழிப்புணர்வு பேரணி விழா நடைபெற்றதுதிருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த 2018 -19 ஆண்டு 39 கொடையாளர்கள் மூலம் கண்கள் பெறப்பட்டு 43 நபர்களுக்கு கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. 2019 நடப்பாண்டிற்கு 34 நபர்களிடம் கண் தானமாக பெறப்பட்டு 26 நபர்கள் அரசு தலமை மருத்துவமனை மூலம் வழங்கப்பட்டு பார்வை பெற்றுள்ளனர்.கண்தானம் செய்ய விரும்புவோர் மாவட்ட நிர்வாகம் அல்லது முதல்வர் அரசு மருத்துவக்கல்லூரி அவர்களை அனுகி உறுப்பு  தானம் தந்து உதவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory