» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரியில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை : நெல்லைஆட்சியர், மாவட்டஎஸ்பி., பேட்டி

சனி 21, செப்டம்பர் 2019 5:34:01 PM (IST)



நாங்குநேரியில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என நெல்லைஆட்சியர் ஷில்பா பிரபாகர், மாவட்டஎஸ்பி., அருண் சக்திகுமார் ஆகியோர் பேட்டியின் போது கூறினார்கள்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தாெடர்பாக இன்று திருநெல்வேலியில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மாவட்டஎஸ்பி., அருண் சக்திகுமார் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் நாங்குநேரி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் துறை அதிகாரி நடேசன் செயல்படுவார் எனவும், தொகுதிக்கு மூன்று துணை தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார்கள்.

நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்று மதியம் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தாெகுதிகளுக்கு அக்.21 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அக்.24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் . இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் செப்டம்பர்.30ஆம் தேதி தொடங்கப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்டோபர்.3ம் தேதி கடைசி நாள் ஆகும்.நாங்குநேரி தொகுதியில் தேர்தல் நன்னடைத்தை விதிகள் இன்று முதல் அமல் ஆகிறது. பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் பேட்டியின் போது கூறினார். 

மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் கூறும் போது நாங்குநேரியில் மொத்தம் உள்ள 299 வாக்குச்சாவடிகளில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory