» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மூத்த பத்திரிக்கையாளரின் மகன் வழக்கறிஞராக பதிவு

சனி 21, செப்டம்பர் 2019 6:18:02 PM (IST)தென்காசி அருகே மூத்த பத்திரிக்கையாளரின் மகன் வழக்கறிஞர் ஆக பதிவு பெற்றார். அவருக்கு வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். மூத்த பத்திரிக்கையாளரான இவரது இளைய மகன் முத்துக்குமரன் இவர் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பை நிறைவு செய்துள்ளார். இவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார். சென்னை தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்ட அரங்கில் புதிய வழக்கறிஞர்கள் பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சட்டத்துறை வல்லுனர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் முத்துகிருஷ்ணன் விண்ணப்பம் ஏற்கப்பட்டு அவர் வழக்கறிஞராக பதிவு பெற்றார்.இவரை சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சண்முகம், அறிவழகன், பாலு, நெல்லை வழக்கறிஞர் ராமசாமி, தென்காசி வழக்கறிஞர்கள் ஆர்எஸ் சுப்பிரமணியம், குமார் ,பாண்டியன், முருகன், ஆதி, பாலசுப்பிரமணியன் அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு குழும சட்ட ஆலோசகர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் திருமலை, ஆக்ஸ்போர்டு பள்ளி தாளாளர் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமை ஆசிரியை குழந்தை தெரேசா உதவித் தலைமையாசிரியர் சுப்பம்மாள் அடைக்கலப்பட்டணம் முப்புடாதி அம்மன் கல்வி குழுமங்களின் தலைவர் ராஜசேகரன், திரைப்பட இயக்குனர் முருகன், ஆசிரியர் விக்னேஷ், சுபமுருகன், தூத்துக்குடி கல்வியாளர் முருகன், தென்காசி பத்திரிகையாளர் சங்க கௌரவ தலைவர்கள் சண்முகம், முரளிதரன், சங்கத் தலைவர் பாலசுப்ரமணியம், துணைத் தலைவர் முத்துசாமி, செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் கணேசன், மூத்த பத்திரிக்கையாளர்கள் நாராயணா ராஜ் கனியத்தா, இசக்கி ராஜன்,முருகன் கணேஷ்குமார், முகைதீன் முத்தையா, பெரியாண்டவர் ஓய்வு பெற்ற துணை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராம், தொழிலதிபர் பாலசுப்பிரமணியன் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் வழக்கறிஞர்கள் கல்வியாளர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory