» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சனி 21, செப்டம்பர் 2019 7:29:38 PM (IST)

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருநெல்வேலி மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு இன்று நடந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள்கோவில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் அருகன்குளம் ராமர் கோவில், எட்டெழுத்து பெருமாள் கோவில், கரியமாணிக்க பெருமாள் கோவில், டவுன் லட்சுமி நரசிம்மர் கோவில், ஜங்ஷனில் உள்ள வரதராஜ பெருமாள், கல்யாண சீனிவாச பெருமாள் கோவில்  உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் காலை முதலே பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். புரட்டாசி முதல் சனிகிழமை என்பதால் கோவில்களில் கூட்டம் அலைமோதியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory