» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நவதிருப்பதி கோவில்களுக்கு செல்ல பேருந்து வசதி

சனி 21, செப்டம்பர் 2019 7:50:28 PM (IST)

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களுக்கு செல்ல நெல்லையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டத.

மகாவிஷ்ணு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. அதிலும் புரட்டாசி சனிகிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் திருநெல்வேலியிலிருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு பேருந்து  சேவை துவக்கப்பட்டது. சிறப்பு பேருந்துகள் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களுக்கு சென்று விட்டு இரவில் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory