» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரி இடைதேர்தல் : அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

புதன் 25, செப்டம்பர் 2019 10:25:13 AM (IST)

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக நாராயணன் போட்டியிடுகிறார். 

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக் 21 ம் தேதி நடைபெற உள்ளது.  இதில் வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது. முக்கிய கட்சிகள் இன்னும் வேட்பாளரை நாங்குநேரி தொகுதிக்கு அறிவிக்காமலிருந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில்அதிமுக வேட்பாளராக நாராயணன் போட்டியிடுகிறார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

வாழ்க்கைகுறிப்பு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த ரெட்டியார் பட்டியைச் சேர்ந்தவர் நாராயணன் (54), இவருடைய தந்தை பெயர் வெட்டும் பெருமாள் நாடார் . இவர் 1986 முதல் அதிமுக உறுப்பினராக உள்ளார். 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் வரை கிளை கழக செயலாளராக பணியாற்றி உள்ளார் . 1996 முதல் ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவராக ஒரு முறையும் துணைத்தலைவராக இருமுறையும் பணியாற்றி உள்ளார் .

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாங்குநேரி சட்டமன்ற தேர்தல் பணிக் குழு உறுப்பினராக பணியாற்றி உள்ளார். 2011 ஆம் ஆண்டு திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட கழக துணைச் செயலாளராக பணியாற்றினார்.  2013ஆம் ஆண்டு முதல் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
 
ரெட்டியார்பட்டி நாராயணனின் மனைவி பெயர் செல்வி. இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன அதில் நாராயணன் பிரியதர்ஷினி பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.நாராயணி தர்ஷினிபிளஸ் டூ படித்து வருகிறார்.நாராயணன் வெங்கடேஸ்வர சேட் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

சீட் கிடைத்தது எப்படி

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கரும்புச் சாறு வியாபாரியாக தன் தொழிலைத் தொடங்கிய நாராயணன், நெல்லை வட்டாரத்தில் ஒரு காலகட்டத்தில் புகழ்பெற்ற பாடி பில்டராக இருந்துள்ளார். பிறகு ரியல் எஸ்டேட் பிசினசில் இறங்கி பெரும் வெற்றிபெற்றவர். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரத்தின் தீவிர ஆதரவாளரான நாராயணனுக்கு தளவாயின் சிபாரிசின் பேரில்தான் சீட் கிடைத்திருக்கிறது என அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.


மக்கள் கருத்து

JeyaprakashSep 25, 2019 - 12:27:57 PM | Posted IP 27.62*****

அவரது முழு பெயர் என்ன, தீண்டாமை வழக்கு இருக்கு அதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை இது தான் உங்கள் கணிப்பா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)


Sponsored Ads

Tirunelveli Business Directory