» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் துப்பு துலங்கியது : ஒருவர் கைது 3 பேர் தலைமறைவு

புதன் 25, செப்டம்பர் 2019 11:17:03 AM (IST)

சுரண்டை அருகே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொலையான அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் துப்பு துலங்கியது. ஒருவர் கைது செய்யப்பட்டார். அரசியல் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் தலைமறைவு ஆனார்கள். இது குறித்து நெல்லை எஸ்பி நேரடி விசாரணை நடத்தினார். 

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தை அடுத்த கேஎம் அச்சம்பட்டி கிராமத்திற்கு அருகே உள்ள அம்பட்ட ஊரணி என்ற இடத்தில் கல்வெட்டான் குழியில் கடந்த 15 - 6 - 2016 அன்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அதிமுக கட்சி வேஷ்டி கட்டிய நிலையில் கிடப்பதாக அரியநாயகிபுரம் விஏஓ ஸ்ரீதர் சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த சேர்ந்தமரம் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் சரியாக துப்பு கிடைக்கவில்லை. 

இந்நிலையில் இக்கொலை தொடர்பாக புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல்,  கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி திருமலாபுரம் விலக்கு அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி வந்த கரடிகுளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி மகன் ராமர் பாண்டி (எ) ராமர் (40) என்பவரை பிடித்து விசாரித்தனர். 

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசவை அவரிடம் தீவிர விசாரணை செய்தபோது பொய்கையை சேர்ந்த சோமசுந்தரம் மகன் மாரியப்பன் (48), அதே ஊரை சேர்ந்த ராமசாமி மகன் வெங்கடேஷ் (38) கரடிகுளத்தைச் சார்ந்த வேல் தேவர் மகன் செண்பகராஜ் (28) என்பவர் தூண்டுதலின்பேரில் கூட்டுச்சேர்ந்து பொய்கை சோ. மாரியப்பன் என்பவருக்கும் அவரது உறவினரான ஜெகநாதன் மகன் முத்துராமலிங்கம் என்பவருக்கும் இடம் சம்பந்தமான பிரச்சனையில் 14-06-19 அன்று ராமர் பாண்டி (எ) ராமர் முத்துராமலிங்கத்தை கேஎம் அச்சம்பட்டி ரோட்டிற்க்கு மேற்கேயுள்ள கல்வெட்டான் குழிக்கு அருகில் உள்ள மண்பாதைக்கு பைக்கில் கூட்டி சென்று கத்தியால் கழுத்து மற்றும் முதுகில் குத்தி கொலை செய்துவிட்டு முத்துராமலிங்கத்தின் பிணத்தை கல்வெட்டான்குழியின் தண்ணீரில் போட்டு தப்பித்து சென்றதும் தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து ராமர் பாண்டியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் முக்கிய அரசியல் பிரமுகரான மாரியப்பன், வெங்கடேஷ், செண்பகராஜ் ஆகியோரை தேடிவருகின்றனர். கொலை செய்ய பயன்படுத்திய பைக் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். மூன்று வருடத்திற்கு முன்பு நடைபெற்ற கொலையில் துப்பு துலக்கிய தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் வெகுமதிகளை வழங்கி பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)


Sponsored Ads

Tirunelveli Business Directory