» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மகனுடன் பைக்கில் சென்ற தாய் தவறி விழுந்து பலி

புதன் 25, செப்டம்பர் 2019 5:33:55 PM (IST)

அம்பாசமுத்திரம் அருகே மகனுடன் பைக்கில் சென்ற தாயார் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வாகைகுளம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் விவசாயி. இவரது மனைவி கோமதி (57). இவர் கடந்த 13ம் தேதி தனது மகனுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பைக் நிலை தடுமாறியதில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்பை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory