» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஊருக்குள் புகுந்து 5 ஆடுகளை அடித்துக்கொன்ற சிறுத்தைகள்

புதன் 25, செப்டம்பர் 2019 6:19:31 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் 5 ஆடுகளை கொன்று சிறுத்தை மீண்டும் அட்டகாசம் செய்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகிறது. அந்த விலங்குகள் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள விளைநிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்துவிடுகின்றன. இன்று அதிகாலை ஒரு சிறுத்தை ஊருக்குள் புகுந்து 5 ஆடுகளை அடித்து கொன்றுவிட்டு காட்டுக்குள் சென்றுவிட்டது.மணிமுத்தாறு போஸ்ட் ஆபீஸ் பகுதியை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன். இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு ஆடுகளை வீட்டின் பின்பகுதியில் உள்ள தொழுவத்தில் அடைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டில் சிறுத்தை புகுந்தது.

அது தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை அடித்துக்கொன்றுவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்று விட்டது. இன்று காலையில் ஈஸ்வரன் எழுந்து பார்த்தபோது அவரது 3 ஆடுகள் கடிக்கப்பட்டு இறந்துகிடந்தது. மேலும் 2 ஆடுகள் மாயமாகியிருந்தது.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஈஸ்வரன் அம்பை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அம்பை வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையில் வனவர் முருகேசன் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒரு பெரிய சிறுத்தை மற்றும் ஒரு குட்டி சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்தது. மணிமுத்தாறு பகுதியில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம் செய்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி மற்றும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory