» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தங்கை வீட்டிற்கு வந்த சகோதரர் மயங்கி விழுந்து பலி

புதன் 25, செப்டம்பர் 2019 7:06:43 PM (IST)

பாளை அருகே தங்கை வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சியைச் சேர்ந்தவர் வீரப்பெருமாள் மகன் மாயாண்டி (47) டிரைவர். இவரது தங்கை வீடு சீவலப்பேரியில் உள்ளது. சம்பவத்தன்று மாலை அவரை பார்ப்பதற்காக மாயாண்டி சீவலப்பேரி சென்றுள்ளார். இதையடுத்து அவரது தங்கை மாயாண்டி க்கு சாப்பாடு கொடுத்து உள்ளார். சாப்பிட்டுக்கொண்டிருந்த மாயாண்டிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் உள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தங்கை குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளை., ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory