» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராதாபுரம் அருகே விபத்து- இளைஞர் பரிதாப பலி

புதன் 25, செப்டம்பர் 2019 7:59:58 PM (IST)

ராதாபுரம் அருகே மோட்டார்பைக்கில் இருந்து கீழே விழுந்து இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சவுந்தர பாண்டியபுரத்தை அடுத்த மேல கள்ளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் என்ற கணேசன் (24). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இவரது நண்பர் ரமணன் (26), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று நள்ளிரவு இவர்கள் 2 பேரும் மோட்டார்பைக்கில் ராதாபுரம் வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்றனர்.

அப்போது மேல கள்ளிகுளம் அருகே உள்ள சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் சறுக்கி கீழே விழுந்தனர். இதில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.  நீண்ட நேரம் உயிருக்கு போராடிய கணேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். ரமணன் அரை மயக்கத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் அந்த பகுதிக்கு வந்தவர்கள், உயிருக்கு போராடிய ரமணனை மீட்டு வள்ளியூர் தனியார் ஆஸ்பத் திரிக்கு அனுப்பினர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலியான கணேஷ் உடலை ராதாபுரம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் ராதாபுரம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory