» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவு

வியாழன் 26, செப்டம்பர் 2019 10:44:26 AM (IST)

நான்குனேரி பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்திருப்போர் அவற்றை இம்மாதம் 29ஆம் தேதிக்குள் காவல் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்டம் நாங்குனேரி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை படைக்கலன்கள் எடுத்துச் செல்ல தடையாணை அமலுக்கு வந்துள்ளது.

எனவே, இம்மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்திருப்போர் அவற்றை இம்மாதம் 29ஆம் தேதிக்குள் தங்களது இருப்பிடத்தின் அருகேயுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் முடிவு வெளியான நாளிலிருந்து ஒரு வாரத்துக்குப் பின்பு திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory