» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அக்.1 முதல் 5 நாள்கள் நிலவேம்பு குடிநீர் வழங்க ஆணையர் உத்தரவு

வியாழன் 26, செப்டம்பர் 2019 11:13:28 AM (IST)

திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ளஅனைத்து வார்டுகளிலும் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 5 நாள்கள் நிலவேம்புக் குடிநீர் வழங்க என மாநகராட்சி ஆணையர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய மாநகராட்சி ஆணையர்  உத்தரவிட்டுள்ளார்.   அதன்படி, பேட்டை,  பழையபேட்டை, திருநெல்வேலி நகரம், எம்.வி.புரம்,  வண்ணார்பேட்டை,  பாளையங்கோட்டை பேருந்து நிலையம்,  பெருமாள்புரம்,  மேலப்பாளையம் ஆகிய இடங்களில் மாநகராட்சி மருத்துவமனைகள்,  திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், நெல்லையப்பர் கோயில் முன்பு  உள்ளிட்ட பல இடங்களில் புதன்கிழமை நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளிலும் தொடர்ந்து 5 நாள்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படும். பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் அருந்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory