» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரி தேர்தலுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்புபடை : நெல்லை ஆட்சியர் பேட்டி

வியாழன் 26, செப்டம்பர் 2019 12:01:17 PM (IST)

நாங்குநேரி தேர்தலுக்காக மத்திய போலீஸ் பாதுகாப்பு படை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

நாங்குநேரி இடைத்தேர்தல் ஏற்பாடுகளை நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர்  ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது,நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் பொதுமக்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியரால் சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் பண்டிகை காலத்தில் ஆன்லைன் பணபரிமாற்றத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.அதிக பணம் எடுத்து செல்வோர் தகுந்த ஆவணங்களை வைத்துகொள்ள வேண்டும்.

இடைதேர்தலுக்கு போதுமான வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.செப்.30 ம் தேதிக்குள் தேர்தல் பார்வையாளர்கள் தொகுதிக்கு வந்துவிடுவார்கள்.1400 ஊழியர்கள் வாக்கு சாவடி பணிகளில் ஈடுபடவுள்ளனர்.அவர்களுக்கான பயிற்சிகள் அக்டோபர் முதல்வாரத்தில் தொடங்கும். என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் பேட்டியின் போது கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory