» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோதையாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு : முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி உத்தரவு

வியாழன் 26, செப்டம்பர் 2019 12:17:10 PM (IST)

கோதையாறு அணையிலிருந்து பாசனத்திற்காக, வரும் 27ம் தேதி முதல், 30 நாட்களுக்கு வினாடிக்கு 75 கனஅடி தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்கள் வேண்டுகோளினை ஏற்று, கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக ராதாபுரம் கால்வாய்க்கு 27.9.2019 முதல் 30 நாட்களுக்கு வினாடிக்கு 75 கனஅடி வீதம் மொத்தம் 194.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.இதனால் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory