» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மூன்றடைப்பு அருகே புதுமாப்பிள்ளை மாயம்

வியாழன் 26, செப்டம்பர் 2019 1:00:11 PM (IST)

திருநெல்வேலி மூன்றடைப்பு அருகே புதுமாப்பிள்ளை திடீரென மாயமானார்.

மூன்றடைப்பு அருகே உள்ள கோவைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் அய்யனார் (27). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்ததாம். இந்நிலையில் சம்பவத்தன்றுஅய்யனார் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லையாம்.

அவரது செல்போனும் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்க வில்லை. இதனால் அவரது தந்தை சந்தானம் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனாரை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory