» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மகனுடன் பைக்கில் சென்ற தாய் தவறி விழுந்து பலி

வியாழன் 26, செப்டம்பர் 2019 5:46:58 PM (IST)

 அம்பையில் மகனுடன் பைக்கில் சென்ற தாய் தவறி விழுந்து பலியானார்.

அம்பாசமுத்திரம்  அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கோமதி (56). இவர்களது மகன் கண்ணதாசன். கடந்த 13ம் தேதி உறவினர் வீட்டுக்கு சென்ற கோமதி, அங்கிருந்து மகன் கண்ணதாசனுடன் மோட்டார்பைக்கில் பின்புறம் அமர்ந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது குண்டும், குழியுமான சாலையில் மோட்டார்பைக் வேகமாக வந்ததால் பின்னால் அமர்ந்திருந்த கோமதி தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த கோமதியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவரை பாளை., ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் கோமதி பரிதாபமாக இறந்தார்.இது குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory