» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தின் வாயிற் கூட்டம்

வியாழன் 26, செப்டம்பர் 2019 6:53:43 PM (IST)வரும் அக் 16ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் முன்பு எல்.ஐ.சி முகவர்கள் சங்கத்தின் சார்பில் (லிக்காய் )தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இதை விளக்கும் வகையில் வாயிற் கூட்டம் நடைபெற்றது.

எல்.ஐ.சி. மீதான ஜி.எஸ்.டி.வரியை  நீக்க வேண்டும்,முகவர்களை மருத்துவ காப்பிட்டு திட்டத்தில் சேர்த்திட வேண்டும் , இன்சூரன்ஸ் துறையில் நேரடி வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிக்க கூடாது,தனியார் மய தாராளமயத்தை கைவிடவேண்டும்,நேரடி வணிகத்தை கைவிடுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக் 16ம் தேதி தர்ணா போராடடம் நடைபெறுகிறது. இதற்காக இன்று எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு கோட்ட நிர்வாகி சுரேசன் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் நடராஜன்,பொது செயலாளர் குழந்தைவேல்,தலைமை நிலைய செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.  வாயிற்கூட்டத்தில் எடிசன், பீமன், சண்முகவேல்,முத்தையா தாஸ், ராமலிங்கம், ஆறுமுகம், புதியவன், சுப்புலட்சுமி,பி ரேமா ,லெட்சுமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory