» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

லாரி மீது மோட்டார் பைக் மோதி சிறுமி பலி

வியாழன் 26, செப்டம்பர் 2019 7:09:51 PM (IST)

பணகுடியில் லாரி மீது மோட்டார்பைக் மோதிய விபத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகள் சுஷ்மிதா (6). இவர்கள் இருவரும் சம்பவத்தன்றிரவு நாகர்கோவிலில் இருந்து வடக்கன்குளத்திற்கு மோட்டார் பைக்கில் சென்றனர். காவல்கிணறு அரசு பள்ளி அருகே வந்தபோது எதிர் பாராத விதமாக முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது அவர்களது பைக் மோதியது.இதில் சகாயராஜ் மற்றும் அவரது மகள் ஆகிய  இருவரும் பலத்த காயம் அடைந்தனர். 

அப்பகுதியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி சுஷ்மிதா பரிதாபமாக இறந்தாள். சகாயராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவ்விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory