» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை : திருமணமான 7 மாதத்தில் பரிதாபம்

செவ்வாய் 8, அக்டோபர் 2019 11:55:45 AM (IST)

தூத்துக்குடியில் திருமணமான 7 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்தவர் கிளமென்ட் மகன் லைசன் (27). மீனவர். இவரது மனைவி மனைவி சுபிதா. இந்த தம்பதியருக்கு திருமணமாகி 7 மாதமாகிறது. லைசன் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதுபோல் நேற்று காலை ஏற்பட்ட தகராறில் மனைவி அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டாராம். இதனால் மன வேதனை அடைந்த லைசன், தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

அருண்Oct 8, 2019 - 12:45:54 PM | Posted IP 108.1*****

குடி குடியை கெடுக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory