» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

த.மு.மு.க.பொதுச் செயலாளர் ஹைதர் அலி நீக்கம் : மாநில செயலாளர் மைதீன் சேட்கான் தகவல்

செவ்வாய் 8, அக்டோபர் 2019 6:40:33 PM (IST)த.மு.மு.க.பொதுச்செயலாளர் ஹைதர் அலி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தென்காசியில் பத்திரிகையாளர்களிடம் அக்கட்சியின் மாநில செயலாளர் மைதீன் சேட்கான் தெரிவித்தார்.

த.மு.மு.க.மாநில செயலாளர் மைதீன் சேட்கான் தென்காசியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:த.மு.மு.க.கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் மாநிலம் முழுவதும் 158 ஆம்புலன்ஸ் சேவைகளை நடத்தி வருகிறோம். எங்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த ஹைதர் அலி கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளோம். மேலும் அவர் தமுமுக டிரஸ்ட் அறங்காவலர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் நடைபெற்ற தமுமுக மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளராக (பொறுப்பு) காஜாகனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹைதர் அலியின் ஆதரவாளர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி முன்னாள் மாவட்ட தலைவர் நயினார் முகம்மது, கோக்கர் ஜான் ஜமால், கொலம்பஸ் மீரான், கோகோஅலி, அபாபீல் மைதீன், முன்னாள் கவுன்சிலர் சலீம், பொன்னானி சேட், சாம்பவர்வடகரை ஷெரீப், அச்சன்புதூர் பீர்மைதீன், பொட்டல் சித்திக், ஆதன்பின் கனியா, பொட்டல் மீரான், செங்கை ஆரிப், பண்பொழி மைதீன், வீராணம் முத்தலீப் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் தாங்கள் தமுமுக என கூறி வருவது கண்டிக்கத்தக்கது. இவர்கள் பொது இடங்களிலும், வரைத்தளங்களிலும் பொய் பிரசாரம் செய்து வருவது அபத்தமானது.

சென்னை உயர்நீதிமன்றம் இவர்களை தமுமுக பெயரையோ, அதன் கொடியையோ பயன்படுத்தக்கூடாது என இடைக்கால தடை விதித்துள்ளது. இருந்தும் இவர்கள் கட்சியின் தலைமைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். ஆகவே இவர்கள் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி தமுமுக ஆம்புலன்ஸ் வாகனத்தினை எங்களிடம் ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான பணிகள் எதுவும் துவங்கப்படாமல் உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்ட அரசுத்துறை அலுவலகங்கள் தென்காசி எல்லைக்குள்ளே அமைக்கப்பட வேண்டும்.டெங்கு காய்ச்சல் பரவி வருவதை தடுக்க மாநில சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் நவ.3ம் தேதி தென்காசியில் தமுமுக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுகிறது. 

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் மாநில தமுமுக தலைவர் பேராசிரியர்  ஜவாஹிருல்லாஹ்- விற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். புளியங்குடி அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் கூடுதலாக செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தமுமுக மாவட்ட தலைவர் முகம்மது யாகூப், மாவட்ட செயலாளர் அஹமது, மாவட்ட பொருளாளர் முகம்மது பிலால், மமக மாவட்ட செயலாளர் பஷிர் ஒலி, தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் பண்பொழி செய்யதலி, விசுவை அப்துல்காதர், தென்காசி நகர தலைவர் நல்லவர் சேட், நகர மமக செயலாளர் ஜாபர் உசேன், தமுமுக செயலாளர் களஞ்சியம் பீர், நகர பொருளாளர் நியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)


Sponsored Ads

Tirunelveli Business Directory