» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஏழு லட்சம் புத்தகங்கள் அடங்கிய புத்தகத்திருவிழா

புதன் 9, அக்டோபர் 2019 11:06:06 AM (IST)அக் 11ல் துவங்கும் சுரண்டை புத்தக திருவிழாவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 7 லட்சம் புத்தகங்கள் உள்ளதாக அதன் ஓருங்கினைப்பாளர் ஆறுமுகம் தெரிவித்தார்.

கீழச்சுரண்டை பொதுநல மன்றம் மற்றும் சமூக நல சங்கங்கள் இணைந்து நடத்தும் 3 வது புத்தக திருவிழா வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் 20 ம் தேதி வரை 10 நாட்கள் சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜர்  தினசரி மார்க்கெட் வளாகத்தில் வைத்து நடக்கிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த புத்தக திருவிழா ஒருங்கினைப்பாளர் ஆறுமுகம் கூறியதாவது.சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம புற மாணவர்களிடையே வாசிப்பு திறனை ஊக்குவிக்கவும் ஐஏஎஸ், ஐபிஎஸ், நீட் போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயார் படுத்தவும் சுரண்டை புத்தக திருவிழா மூன்றாம் ஆண்டாக நடக்கிறது. இத் திருவிழாவில் சுரண்டை, தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், ஊத்துமலை, புளியங்குடி, கடையநல்லூர், வீரசிகாமணி, செங்கோட்டை பகுதிகளை சேர்ந்த 1080 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் ஓரு லட்சத்துக்கும் மேற்ப்பட்ட பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் பார்வையிடுகின்றனர் 

50 புத்தக அரங்குகளில் 10 லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வைக்கப்படுகின்றன. அத்துடன் தினமும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும், அதிக புத்தகங்களை வாங்குபவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. பல் வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். தினமும் மாலை  பள்ளிகளின் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சுமார் இரண்டாயிரம் மாணவர்களுக்கு தமிழ் தினசரி நாளிதழ்களை வாசிப்பதினால் ஏற்படும் நல்ல பழக்கங்களை தெரிவித்து நாளிதழ் வாசிக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். 

மேலும் நெல்லை சார் ஆட்சியர் தலைமையில் நெகிழில்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு அரங்கமும் மாணவ மாணவிகளிகளுக்கிடையே காந்தி பற்றிய போட்டிகள்  நடத்தி பரிசுகள் வழங்கப்படும் என்றார். பேட்டியின் போது புத்தக திருவிழா ஒருங்கினைப்பாளர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்லஸ், சுரண்டை அரிமா சண்முகவேல், சாதனவித்யாலயா பள்ளி ராஜேஸ், ஆறுமுகா ஐஏஎஸ் அகாடமி சண்முகவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்


மக்கள் கருத்து

அந்தோணி ராஜ்Oct 9, 2019 - 11:53:32 AM | Posted IP 42.11*****

மிகவும் அருமையான வரலாறு நிகழ்வு... அடுத்த தலைமுறைக்கான விதையை படுகின்றன. கண்டிப்பாக அது மரமாக வளரும்... வாழ்த்துக்கள் 🥰

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory