» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பயணிகள் கூட்டத்தால் திணறிய ரயில் நிலையங்கள்

புதன் 9, அக்டோபர் 2019 11:54:43 AM (IST)

சரஸ்வதிபூஜையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள், சென்னை திரும்ப புறப்பட்டதால் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சனி,ஞாயிறு, சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜை என தொடர்ந்து பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் வந்ததால் சென்னை உட்பட வெளியூரில் வசித்தவர்கள் சொந்த ஊர் வந்தனர். விடுமுறை நேற்றுடன் முடிவடைந்ததால் செங்கோட்டையில் இருந்து சென்னைக்குச் செல்லும் பொதிகை விரைவு ரயிலில் ஏற கடையம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், புளியங்குடி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பயணிகள் திரண்டனர்.

முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிந்த நிலையில் முன்பதிவு பதிவு இல்லாத பெட்டிகளில் ஏற கடும் கூட்ட நெரிசல் நிலவியது.கூட்டத்தை எதிர்கொள்ள ரயில்வே போலீசார் பயணிகளை வரிசையில் ஏற அனுமதித்தனர்.தென்காசியிலும் இதே நிலையே நீடித்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory