» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அம்மன் கோயில் சப்­ப­ரங்கள் அணி­வ­குப்பு கோலா­க­லம்

புதன் 9, அக்டோபர் 2019 12:55:42 PM (IST)தச­ரா திரு­வி­ழாவை முன்­னிட்டு பாளை., யில் 12 சப்­ப­ரங்­களின் அணி­வ­குப்பு நடந்­த­து. 

தென் மாவட்­டத்தில் பாளை., நெல்லை டவுன் அம்மன் கோயில் தசரா அணி­வ­குப்பு மிகவும் சிறப்பு வாய்ந்­தது. பாளை., நெல்லை டவுன் அம்மன் கோயில்­களில் தச­ரா திரு­விழா கடந்த 10 நாட்­க­ளாக நடந்துவ­ந்­த­து.நெல்லை டவுனில் சக்தி தரிசனம் என்ற பெயரில் ஆண்­டு­தோறும் அம்பாள் கோயில்­களின் 27 சப்­ப­ரங்கள் அணி­வ­குப்பு நடை­பெறும். பாளை., யில் தசரா திரு­விழா கடந்த செப்.30ம் தேதி கொடி­யேற்­றத்­துடன் துவங்­கி­யது. 

பாளை., ஆயி­ரத்­தம்மன், தூத்­து­வாரி அம்மன், வடக்கு முத்­தா­ரம்மன், தெற்கு முத்­தா­ரம்மன், யாதவர் உச்­சினி மாகாளி அம்மன், கிழக்கு உச்சினி மாகாளி அம்மன், வடக்கு உச்­சினி மாகாளி அம்மன், விஸ்­வ­கர்ம உச்­சினி மாகாளி அம்மன், புதுப்­பேட்டை உல­கம்மன், புது உல­கம்மன், முப்­பி­டாதி அம்மன், சமாதா­ன­புரம் மாரி­யம்மன், வண்­ணார்­பேட்டை பேராத்துச் செல்வி அம்மன் உட்­பட 12 சப்­ப­ரங்கள்  கோயில்­களில் புறப்­பட்டு, பாளை., ராமர்­ கோயில் திடலில்  காலை அணி­வ­குத்­தன. 

பேராத்துச் செல்வி அம்மன் கோயில் சப்­பரம் வந்­ததும் 12 சப்­ப­ரங்­க­ளுக்கும் ஒரே நேரத்தில் தீபா­ரா­தனை நடந்­தது. இந்த காட்­சியை ஆயிக்­க­ணக்­­கான பக்­தர்கள் கண்டு மகிழ்ந்­த­னர். தசரா திரு­­விழாவை முன்­னிட்டு  போலீசார், ஊர்­காவல் படை­யினர் தீவிர கண்­கா­ணிப்பு பணி மற்றும் பாது­காப்பு பணியில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)


Sponsored Ads

Tirunelveli Business Directory