» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதன் 9, அக்டோபர் 2019 1:24:08 PM (IST)தென்காசியில் சம்பள உயர்வு - நிலுவை தொகை கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொமுச, சிஐடியு, ஐஎன்டியூசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் ஊதியஉயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க கோரியும் போக்குவரத்து தொழிலாளர்களிடம்  தமிழக அரசு பிடித்தம் செய்த  நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தொமுச பணிமனை பொருளாளரும் நெல்லை மேற்கு  மாவட்ட திமுக  கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளருமான வல்லம் திவான்ஒலி தலைமை தாங்கினார் தென்காசி பணிமனை தொமுச செயலாளர் ராமகிருஷ்ணன், தொமுச தலைவர் காட்வின் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தென்காசி போக்குவரத்து துறை பணிமனை சிஐடியு சங்க நிர்வாகி லெனின் வரவேற்றுப் பேசினார். 

தொமுச பொதுக்குழு உறுப்பினர் இக்னேஷியஸ், ஐஎன்டியூசி தொழிற்சங்க நிர்வாகிகள் அருணாசலம் மற்றும் பல்வேறு தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள் சிராஜுதீன், மகேஷ், சின்னப்பன், செல்லப்பா, நடராஜன், சாமிநாதன், மாடசாமி,  பொன்னுத்துரை, நாராயண பெருமாள், கார்த்திகேயன், தங்கமணி, ஈஸ்வரன், முருகையா உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory