» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே இளம்பெண் அடித்துக் கொலை : கணவருக்கு போலீஸ் வலை

புதன் 9, அக்டோபர் 2019 1:35:17 PM (IST)

நெல்லை அருகே இன்று காலை குடும்பத் தகராறில் மனைவி அடித்து கொலை செய்யப்பட்டார்.  அவரது கணவரை போலீசார் தேடிவருகிறார்கள். 

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி முனைசேகரன் குடியிருப்பை சேர்ந்தவர் பாரதிராஜா (31). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நிர்மலா(30) என்பவரும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஸ்ரீநிதி (8) நரேன் சந்திரன் (பத்து மாதம்) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாரதிராஜா ஒரு தனியார் பைக் ஷோ ரூமில் வேலை செய்து வருகிறார். 

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் நிர்மலா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாராம். இதையடுத்து நேற்று அவரது பெற்றோர் சமரசம் ஏற்படுத்தி நிர்மலாவை கணவர் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். இந்நிலையில் இன்று காலை கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்படவே நிர்மலாவை அடித்து உதைத்த பாரதிராஜா அவரை பிடித்து தள்ளியுள்ளார். 

இதில் சுவரில் மோதிய நிர்மலா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த பாரதிராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனிடையே சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் சேரன்மகாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிர்மலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதிராஜாவை தேடி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)


Sponsored Ads

Tirunelveli Business Directory