» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுரண்டையில் முடங்கிக் கிடக்கும் சாலை விரிவாக்கப் பணி

புதன் 9, அக்டோபர் 2019 5:35:46 PM (IST)திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் சாலை விரிவாக்கப் பணி முடங்கிக் கிடக்கின்றது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் வளர்ந்து வரும் வர்த்தக நகரமான சுரண்டையில் அண்ணா சிலையை சுற்றி ரவுண்டானா அமைத்து அழகுபடுத்தவும் அப்பகுதியில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையை அகலப்படுத்தி அண்ணாசிலை அருகில் ரவுண்டானா அமைக்கவும் கடந்த 9 மாதத்துக்கு முன்பு ஒப்பந்தம் கோரப்பட்டு கடந்த 3 மாதத்துக்கு முன் அதற்கான பணிகள் துவக்கப்பட்டன. இதற்காக ஆனைகுளம் விலக்கு வரை உள்ள கடைகளின் முன்புறம் இருந்த தற்காலிக ஆக்கிரமிப்புகளை வியாபாரிகளே முன்வந்து அகற்றி வந்த நிலையில் சாலை விரிவாக்கத்திற்காக பணி மிக தாமதமாக துவங்கியது. 

இந்நிலையில் இது குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து ரோட்டின் கீழ்புறம் சாலை விரிவாக்கம் செய்யப்படுகின்ற பகுதிகளில் குழிகளைத் தோண்டி ஜல்லிகளை திரும்பியுள்ளனர். இப் பணி முடிந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியும் தொடர் பணிகள் நடைபெறவில்லை. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள மின்சார கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், பயணிகள் நிழற்குடை,  அகற்றப்பட்டு ஓரமாக வைக்கப்படாத நிலையில் பணிகள் முடங்கி கிடப்பதால் இப்பகுதியில் வாகனங்களும், இருசக்கர வாகனத்தில் வருவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து விசாரித்தபோது மின்சார வாரியத்திற்கு கட்டணங்கள் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் பணிகளைத் தொடர்ந்து நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இருப்பினும் நெடுஞ்சாலைத் துறையின் உயர் அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பணிகள் முடங்கி கிடப்பதாக தெரிய வருகிறது. எனவே நெடுஞ்சாலைத் துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து முடங்கி கிடக்கும் அண்ணா சிலை ரவுண்டானா மற்றும்  சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)


Sponsored Ads

Tirunelveli Business Directory