» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாட்ஸ்அப் மூலம் பொய்ச் செய்தி பரப்பப்படுகிறது : ஹோட்டல் நிறுவனம் புகார்

புதன் 9, அக்டோபர் 2019 6:28:21 PM (IST)

தென்காசியில் பிரபல ஓட்டல் பற்றி தவறான தகவலை வாட்ஸ் அப் மூலம் பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரபல ஹோட்டல் சார்பில் காவல்துறை மற்றும் சைபர் கிரைம் பிரிவிலும்  புகார் அளித்துள்ளனர்.

தென்காசி தெற்கு மாசி வீதியில் உள்ள பிரபலமான ஆனந்த பவன் ஹோட்டல் பற்றி கடந்த ஐந்தாம் தேதி வாட்ஸ்அப் மூலம் ஒரு தவறானசெய்தி  பரபரப்பான செய்தி பரப்பப்பட்டுள்ளது.அந்தச் செய்தியில் தென்காசி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர் ஜெகநாதன் என்பவர் கடந்த ஐந்தாம் தேதி தென்காசியில் உள்ள ஆனந்தபவன் ஹோட்டலில் தக்காளி சாதம் வாங்கியதாகவும் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் ஒரு பீடி இருந்ததாகவும் தென்காசி துணை வட்டாட்சியர் ஜெகநாதன் இதுபற்றி புகார்  தெரிவித்ததாகவும் வாட்ஸ் அப் மூலம்  செய்தி பரபரப்பாக வெளிவந்தது.

இதை அறிந்த ஆனந்த பவன் ஹோட்டல் உரிமையாளர் தனது ஓட்டலில் உணவு தயார் செய்யும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் இதுபோன்ற தவறுகள் இதுவரை நடக்கவில்லை என்றும் அதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்பதும் தெரிய வந்தது உடனடியாக ஓட்டல் உரிமையாளர் சம்பந்தப்பட்ட தென்காசி துணை வட்டாட்சியர் ஜெகநாதனை சந்தித்து விவரம் கேட்டபோது அந்த வாட்ஸ்அப் செய்திக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை அப்படி ஒரு புகாரை நான் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் மேலும் விசாரித்ததில் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் சிலர் தொழில் போட்டியின் காரணமாக பொறாமையின் காரணமாக இப்படி ஒரு தவறான செய்தியை வாட்ஸ்அப் மூலம் பரப்பி இருப்பது  தெரியவந்துள்ளது.

எனவே தென்காசி ஆனந்த பவன் ஹோட்டல் உரிமையாளர் தனது ஓட்டல் பற்றி தவறான பொய்யான தகவல்களை வாட்ஸ் அப் மூலம் பரப்பிய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  தென்காசி காவல் நிலையம் மற்றும் சைபர் கிரைம் பிரிவிலும் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களை வாட்ஸ் அப் மூலம் பரவி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory