» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செல்போனில் பேசியதை கண்டிப்பு : இளம்பெண் தற்கொலை

புதன் 9, அக்டோபர் 2019 7:34:24 PM (IST)

நாங்குநேரியில் செல்போனில் பேசியதை கண்டித்ததால் திருமணம் நிச்சயமான பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரி அருகே வசித்து வரும் சரஸ்வதி என்பவரது மகள் ரேணுகா (19). இவருக்கும் அதே பகுதியினை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேணுகா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதை அவரது தாய் கண்டித்ததால் விரக்தியடைந்த ரேணுகா சம்பவத்தன்று வீட்டில் விஷமருந்தி மயங்கி விழுந்துள்ளார். 

உடனே அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory