» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்

வியாழன் 10, அக்டோபர் 2019 11:40:26 AM (IST)குற்றாலம் திருக்குற்றாலநாதர் சுவாமி திருக்கோவில் ஐப்பசி விசுத் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குற்றாலம் திருக்குற்றால நாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி விசுத் திருவிழா காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது முன்னதாக இலஞ்சிக்குமாரர் வருகை நடைபெற்றது பின்னர் அதிகாலை 5.20 மணிக்கு மேல்  6.20 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 18-ஆம் தேதி வரை திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஐந்தாம் திருவிழா திருநாளான 13ஆம் தேதி சிறப்பு வாய்ந்த தேரோட்டம் நடைபெற உள்ளது இதில் விநாயகர், முருகன், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்மன் ஆகிய நான்கு தேர்தல் ஒரே நேரத்தில் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி இந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.

வருகிற 15-ம் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற உள்ளது. 16ஆம் தேதி காலை சித்தரை சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற உள்ளது.  18 ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் இலஞ்சிக்குமாரர் பிரியாவிடை நிகழ்ச்சி மற்றும் ரிஷப வாகன காட்சி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, குற்றாலநாதர் சுவாமி கோவில் தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory