» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காமராஜர் கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கு

புதன் 16, அக்டோபர் 2019 10:15:22 AM (IST)மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 201 சார்பில் கல்லூரியின் கனி வேலவன் கலையரங்கத்தில் வைத்து நடந்தது. 

கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜெயா தலைமை வகித்து துவக்கி வைத்தார். வணிகவியல் தலைவர் அஜித் முன்னிலை வகித்தார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் மெர்லின் சீலர் சிங் வரவேற்றுப் பேசினார். சமூக ஆர்வலர்கள் முரளி, ஆனந்தகிருஷ்ணன் ஜெயபால், ஓய்எம்சிஏ செய்தி தொடர்பாளர் ராஜகுமார் ஆகியோர் இளைஞர்கள் எழுச்சி குறித்தும், இந்தியா வல்லரசு ஆவதற்கு கலாமின் கனவை நிறைவேற்ற இளைஞர்கள் எவ்விதம் செயல்பட வேண்டும் என்று விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி அபிநயா நன்றி கூறினார். ஏற்பாடுகளை என்எஸ்எஸ் திட்ட அலுவலர் மெர்லின் சீலர் சிங் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory