» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முரசொலி செய்தியாளர் மாரடைப்பால் மரணம்: தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் இரங்கல்

புதன் 16, அக்டோபர் 2019 10:50:06 AM (IST)

முரசொலி செய்தியாளர் மணிகண்டன் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் இரங்கல் தெரிவித்துள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவிலைச் சேர்ந்தவர் மணிகண்டன். முரசொலி செய்தியாளரான இவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இரண்டாம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணம் சார்ந்த பணிகளை முடித்து விட்டு இரவு உணவுக்குப் பின் வீட்டில் கட்சியினர் சிலருடன் அமர்ந்து எழுத்துப் பணியில் இருந்திருக்கிறார். 

அப்போது திடீர் நெஞ்சு வலி ஏற்படவே நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணியளவில் சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் இரங்கல் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து

Sivasubramanian. SOct 17, 2019 - 08:11:03 PM | Posted IP 106.1*****

ஆழ்ந்த இரங்கல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory