» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாலுகா அலுவலகத்தில் சர்வதேச பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதன் 16, அக்டோபர் 2019 1:39:34 PM (IST)சர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வருவாய்த் துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத் துறை, இணைந்து நடத்திய பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நெல்லை மாவட்டம் விகே புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது. 

நிகழ்ச்சிக்கு வருவாய்த்துறை நீதிமன்ற சார் ஆட்சியர் சௌந்தரராஜன் தலைமை வகித்து பேரிடர் மேலாண்மையில் அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பேசினார். தாசில்தார் ஹரிஹரன் வரவேற்றார். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து பாலச்சந்தர் பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறையின் பணிகள், மற்றும் கிடைக்கின்ற உபகரணங்கள் மூலம் வெள்ளம், தீ, மற்றும் பேரிடர் நேரங்களில் முன் தடுப்பது குறித்து விளக்கினார். 

வீ கே புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜில்சா பேரிடர் நேரங்களில் எடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்து பேசினார் நிகழ்ச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாய் சுப்புலட்சுமி, துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory