» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விடுமுறையால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சனி 19, அக்டோபர் 2019 12:13:34 PM (IST)



விடுமுறையொட்டி குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் திரண்டனர். 

நெல்லை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக உள்ளது.

தற்போது மழை குறைந்து நீர்வரத்தும் சற்றும் குறைந்ததால், மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் நீண்டவரிசையில் காத்திருந்து அருவியில் குளித்து மகிழடந்தனர். இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory