» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டம்

சனி 19, அக்டோபர் 2019 1:46:07 PM (IST)திருநெல்வேலி மாவட்ட பேரிடர் மேலாண்மை தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நெல்லை ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில்  மாவட்ட கண்காணிப்பு அலுவலர்பேசியதாவது-திருநெல்வேலி மாவட்டத்தில் பேரிடர் நிகழும் காலங்களில் பொதுமக்களை உடனடியாக மீட்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத் துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவைகள் ஒருங்கிணைந்து புயல், வெள்ளம் தொடர்பான தகவல்களை உடனடியாக பரிமாறவும், தத்தம் துறையினர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை அலுவலர்களின் அலுவலக தொலைபேசி எண்கள் மற்றும் கைபேசி எண்கள் அனைத்து துறையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரம் இயங்கும் வகையில் வெள்ள கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.  
பொதுப்பணித்துறை (நீர் வள ஆதார அமைப்பு), தாமிரபரணி, சிற்றாறு, கோதையாறு, மேலவைப்பாறு வடிநில கோட்டங்கள் மூலம் அணைகளில் நீர்வரத்து இருப்பு மற்றும் நீர்போக்கு விபரங்களை தினமும் காலை 8.00 மணிக்குள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு தொலைபேசியில் தெரிவித்தல். சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் அவர்களது கட்டுப்பாட்டின் கீழே உள்ள குளங்கள் மற்றும் கால்வாய்களை நேரில் பார்வையிட வேண்டும். 

தீயணைப்புத் துறையினர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் உயிர்களை உடனடியாக காப்பாற்ற தேவையான படகு,  மற்றும் நன்கு நீச்சல் தெரிந்த நபர்கள் குறித்து அறிந்து, ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். தீயணைப்புத்துறை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊர்திகளை தயார் நிலையில் வைத்தல், ஒவ்வொரு வாகனத்திற்கும் தேவையான பேட்டரி, ஜெனரேட்டர் மற்றும் கைவிளக்கு ஆகியவற்றை சரி செய்து நல்ல நிலையில் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory