» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செங்கோட்டையில் ரத்ததான முகாம் நடந்தது

சனி 19, அக்டோபர் 2019 5:38:30 PM (IST)செங்கோட்டையில் ரோட்டரி கிளப் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் ரத்ததான நடந்தது.

செங்கோட்டை அரசு பொது நூலக கட்டிடத்தில் வைத்து செங்கோட்டை ரோட்டரி கிளப் சென்டரல், வாசகர் வட்டம் சார்பில் இரத்ததான முகாம் நடந்தது.  முகாமிற்கு ரோட்டரி கிளப் துணை ஆளுநர் ரமேஷ்பாபு தலைமைதாங்கினார். வாசகர் வட்டத் தலைவர் இராமகிருஷ்ணன், ரோட்டரி கிளப் தலைவர் இராமகிருஷ்ணன், செயலாளர் செய்யதுசுலைமான், வாசகர் வட்ட இணைச்செயலாளர் செண்பகக்குற்றலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் இராமசாமி வரவேற்று பேசினார்.

இரத்த தான அவசியம்  குறித்து விழுதுகள் டிரஸ்ட் நிறுவனர் சேகர் பேசினார். ஆகாஷ் அகாடமி மாணவர்கள், பொதுமக்கள் இளைஞர்கள் பலர் தாமக முன்வந்து ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர்நல மைய அலுவலர்  டாக்டர் இராஜகோபால், தென்காசி மாவட்ட அரசு தலைமை டாக்டர் பாரதிகண்ணம்மா, லேப் டெக்னீசியன் ஆயிஷா, செவிலியர்கள் சுதா, ராஜேஸ்வரி, மற்றும் மருத்துவ குழுவினர், ஐடிசி ஆலோசகர் டாக்டர் வினிபாரதி, இலத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் ஜென்ஸிவர்கீஸ், செவிலியர் ஸ்ரீவள்ளி, லேப்டெக்னிசியன் ரஹீமா, சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் குமார், திவான், பால்ராஜ், இராமையா, நாசர் சமூக ஆர்வலர் நேசமணி, முகைதீன்பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory