» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகள் தயார் : நெல்லை ஆட்சியர், எஸ்பி., பேட்டி

சனி 19, அக்டோபர் 2019 6:09:18 PM (IST)திருநெல்வேலி மாவட்டம், 227 நான்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் மாவட்ட எஸ்பி., அருண் சக்தி குமாருடன் செய்தியாளர் சந்திப்பு மாவட்டஆட்சியரகத்தில் இன்று (19.10.2019) நடைபெற்றது 

அக் 21 ம் தேதி  அன்று 227. நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. மொத்த வாக்களர்கள்257418.   இவர்களில்,  ஆண்- 127389,    பெண் - 129748 மற்றவர்கள் - 3 சர்வீஸ் வாக்காளர்கள் 278.  ஆகியோர்  வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு பணியில் மொத்தம் 1460 தேர்தல் பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர்.299 வாக்குச்சாவடி மையங்களிலும்,  தடையில்லா மின்சாரம், சுத்தமான குடிநீர், சாய்தளம், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

10 வாக்குப்பதிவு மையத்திற்கு  ஒரு மண்டல குழு என மொத்தம் 29 மண்டல குழுக்கள் களத்தில் இருப்பார்கள்.  இருப்பில் 1 குழு இருக்கும். மொத்தம் வாக்குச்சாவடி மையங்கள் 299 உள்ளன. ஒரு மையத்திற்கு 2  வாக்குப்பதிவு இயந்தரங்களும் 1 கட்டுப்பாட்டுக் இயந்திரமும்) மற்றும் 1 விவிபேட் இயந்திரமும்  பயன்படுத்தப்பட  உள்ளன. வேட்பு மனு தாக்கள் 23.09.2019 அன்று தொடங்கி 30.09.2019  அன்று நிறைவடைந்தது.  04.09.2019 அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரித்த பின்னர் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

பறக்கும்படை குழுக்களும், 36 நிலை கண்காணிப்புக்குழுக்களும் மற்றும் 1  வீடியோ சர்வேலன்ஸ் டீம்  தேர்தல்  பணியில்  உள்ளன.மத்திய அரசு ஊழியர்கள் 35 பேர்  நுண்பார்வையாளர்களாக  நியமிக்கப்பட்டு   உள்ளனர்.2471  மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க  உள்ளனர். இவர்கள்  வாக்களிப்பதற்கு உதவியாக,  170 வாக்கு மையங்களில்  வீல் சேர்  மற்றும் தன்னார்வலர்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.114 பார்வையற்ற வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.  114 பேருக்கும் பிரத்தியேகமான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு, பிரெய்லி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேவையான வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வரிசையில் நிற்பதற்கு  ஏதுவாக  சாமியானா வசதி  ஏற்படுத்தப்பட்டுள்ளது.தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு  நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை.கூட்டம் அதிகமாக இருந்தால்,  6மணிக்கு முன்பாக வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, காத்திருப்பு அறையில் உட்கார வைத்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளருக்கு  ஒரு முகவர் வீதம் வாக்குச்சாவடியில்  இருக்க வேண்டும்.  மாலை 3 மணிக்கு மேல் மாற்று முகவர்கள்  உள்ளே/வெளியே வர அனுமதிக்க  இயலாது. வாக்குப்பதிவு  முடிந்தபின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திங்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு,  ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனத்தில்  ஏற்றி வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்படும்.

வாக்குச்சாவடி மையத்தில், வாக்குப்பதிவின்போது, வேட்பாளர் மற்றும் முகவர்கள் தவிர யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. வாக்குப்பதிவின்போது நாங்குனேரி தொகுதியில் இயங்கும், அரசு அலுவலங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் அன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.  நாங்குநேரி வாக்காளராக இருந்து, பிற தாலுகா, மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு  வாக்காளர் அட்டையினை காண்பித்து, ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக  கணக்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும்  எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் சுமூகமாக நடைபெற அனைத்து அரசியல் கட்சியினரும், அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றவும், பொதுமக்கள் அமைதியாக வாக்களிக்கவும  கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory