» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வெடிபொருள் விற்பனை நிலையங்களை மூட உத்தரவு

சனி 19, அக்டோபர் 2019 7:02:11 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் வெடிபொருள் விற்பனை நிலையங்களை 6 நாட்கள் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நாங்குநேரி தொகுதி இடைதேர்தல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நடைபெறுவதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடிபொருள் விற்பனை நிலையங்களும், அனைத்து வெடிபொருள் கிடங்குகளும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 25ம் தேதி வரை 6 நாட்கள் மூடிவைத்து இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே மேற்கண்ட 6 நாட்களும் வெடிபொருள் விற்பனை நிலையங்கள், கிடங்குகளையும் திறந்து வைத்து இருக்க கூடாது. எந்த வியாபாரமும் செய்யக்கூடாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory