» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டில் பதுக்கி மது விற்பனை செய்த ஒருவர் கைது : 187 பாட்டில்கள் பறிமுதல்

திங்கள் 21, அக்டோபர் 2019 1:12:32 PM (IST)தென்காசியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஒருவர் தனது  வீட்டில் ரகசியமாக மது விற்பனை செய்த ஒருவரை தென்காசி  போலீசார் அதிரடியாக கைது செய்ததோடு அவரது  வீட்டிலிருந்து 187 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 

நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் கடந்த 3 நாட்களாக அடைக்கப்பட்டுள்ளது இதனால் குடிமகன்கள் மதுபாட்டில்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.கடந்த காலங்களில் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கும் நேரங்களிலெல்லாம் குடிமகன்களுக்கு விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை தனியார்கள் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தொடர்கதையாக நடைபெற்று வந்திருக்கிறது.

அதைப்போலவே இந்த மூன்று நாள் விடுமுறையை பயன்படுத்தி முன்னதாகவே மதுபாட்டில்களை விலைக்கு வாங்கி வீடுகளில் பதுக்கி வைத்து விடுமுறை தினங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கத்தில் தென்காசியில் டாஸ்மாக் கடைகளில் யாராவது அதிக எண்ணிக்கையில் மதுபாட்டில்களை வாங்குகிறார்களா? என்பதை தென்காசி போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில் நேற்று தென்காசி மாதாங் கோவில் தெருவில் ஒருவர் மது பாட்டில்களை தனது வீட்டில் வைத்து விற்பனை செய்வதாக தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேலு விற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்த தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் உடனடியாக தென்காசி மாதாங்கோவில் தெருவில் உள்ள மனோ (27) என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து  அதிரடி சோதனை நடத்தினார். 

சோதனையில் அவரது வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த 187 மதுபாட்டில்களையும் தென்காசி போலீசார் பறிமுதல் செய்ததோடு சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த மனோ என்பவரையும் கைது செய்தனர்.இந்தச் சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசியில் கைது செய்யப்பட்டுள்ள மனோவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory