» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதி ஒருவர் பலி

திங்கள் 21, அக்டோபர் 2019 1:52:06 PM (IST)

நெல்லை அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் படுகாயமடைந்து சலவைத் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் சிவன் மகன் ராமச்சந்திரன்(46). சலவைத் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கல்லிடை குறிச்சி பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாம். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ராமச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கல்லிடைகுறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory