» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரியில் தங்கியிருந்ததாக வசந்தகுமார் எம்பி., கைது ! : காங்கிரஸ் கட்சி கண்டனம்

திங்கள் 21, அக்டோபர் 2019 5:33:25 PM (IST)

நாங்குநேரியில் தங்கியிருந்ததாக காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தன்னை கைதி போல அழைத்து வந்தனர் என வசந்தகுமார் எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கழுங்கடி பகுதியில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். வெளிநபரான வசந்தகுமார் நாங்குநேரியில் தங்கியிருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கூறும் போது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு சாலையில் செல்லக்கூட உரிமையில்லையா?

நாங்குநேரி தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டால் என்னை கைது செய்யலாம். ஆனால் நான் என் வீட்டிற்குதான் செல்கிறேன். அப்படியிருக்க என்னை தடுத்தால் என்ன நியாயம் உள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை கைதி போல போலீசார் அழைத்து வந்தனர். இதை வன்மையாக கண்டிக்கதக்கது என்றார்.கைது செய்யப்பட்ட வசந்தகுமார் எம்பி.,யை உடனே விடுதலை செய்ய வேண்டுமென காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory