» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி மீது வழக்கு : வசந்தகுமார் எம்பி விடுவிப்பு

திங்கள் 21, அக்டோபர் 2019 7:05:19 PM (IST)

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் பாளை பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் காலை முதலே பொதுமக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டாலும் விரைவில் சரி செய்யப்பட்டது. மேலும் கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் குடை பிடித்தபடி வாக்களிக்க சென்றனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இந்நிலையில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கழுங்கடி பகுதியில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். வெளிநபரான வசந்தகுமார் நாங்குநேரியில் தங்கியிருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாங்குநேரி காவல் நிலையத்தில் இருந்து வசந்தகுமார் எம்பி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது நெல்லை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதிக்குள் தேர்தல் விதிமுறைகளை மீறி நுழைந்ததாக கிராம நிர்வாக அதிகாரி சுடலை முத்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவு முடிந்த நிலையில் நாங்குநேரியில் 66.10% வாக்குகள் பதிவாகியுள்ளன என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரஹ சாகு தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory