» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாநில இறகு பந்து போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் தேர்வு

திங்கள் 21, அக்டோபர் 2019 7:22:57 PM (IST)



மாநில இறகுப் பந்து போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி பேட்டை 999- இறகுப் பந்து உள் விளையாட்டு அரங்கில் திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நவீன், ரிச்சர்ட் மெர்வின் ஆகிய இருவரும் சூப்பர் சீனியர் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றனர். இவர்கள் இருவரும் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றி பெற்ற இரு மாணவர்களையும் ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory