» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புளியரை தெட்சிணாமூர்த்தி கோவில் குருபெயர்ச்சி விழா : வரும் 28ம் தேதி நடக்கிறது

திங்கள் 21, அக்டோபர் 2019 8:38:44 PM (IST)

செங்கோட்டை அருகேயுள்ள புளியரை தெட்சிணாமூர்த்தி கோவிலில் வரும் 28ம் தேதி குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

செங்கோட்டை அருகேயுள்ள புளியரையில் சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி, தெட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை தோறும் இக்கோவிலில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு வரும் 28ம் தேதி இரவு 12.57 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் அன்றைய தினம் புளியரை தெட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. 

குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், அபிசேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 8.45 மணிக்கு இலட்சார்க்கனை துவங்குகிறது.  27ம் தேதி காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மதியம் அபிசேகம், அலங்கார, தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் சிறப்பு மேளம், நாதஸ்வர கச்சேரியும், சிறப்பு அபிசேகமும், இரவு சகஸ்ரநாம அர்ச்ச்னையும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நாளான 28ம் தேதி காலையில் தேவார இன்னிசையும், மதியம் சிறப்பு அபிசேகமும், மாலையில் நாமசங்கீர்த்தனமும், இரவு 7 மணிக்கு ருத்ர ஏகாதசியும், 10 மணிக்கு சிறப்பு மேளம், கிளாரினெட் இசையும் நடைபெறுகிறது. நள்ளிரவு 12.57 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிப்பதை முன்னிட்டு குருபெயர்ச்சி சிறப்பு அபிசேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை சுசீந்திரம் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி, தெட்சிணாமூர்த்தி கோவில் ஸ்ரீகாரியம் ரத்தினவேலு மற்றும்  கோவில் பணியாளர்கள், நிகழ்ச்சி உபயதாரர்கள் செய்து வருகின்றனர். குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு தென்காசியில் இருந்து புளியரைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory