» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வியாழன் 7, நவம்பர் 2019 8:08:09 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (நவ.8) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்  வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.8) காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி ஆசிரியர் காலனி 1ஆம் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில், பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், 10, பிளஸ் 2, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் தங்களது பயோடேட்டா, கல்விச் சான்றுகளுடன் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

தூத்துக்குடி மக்கள்Nov 7, 2019 - 11:18:11 AM | Posted IP 108.1*****

மாவட்ட ஆட்சி தலைவரின் கவனத்திற்கு ।।।। ஐய்யா நாங்கள் பலமுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எங்களது பயோ டேட்டாவை கொடுத்துள்ளோம் ஆனால் எந்த கம்பெனியில் இருந்தும் வேலை வழங்க படவில்லை। எங்கள் தகவலை பெற்றுக்கொண்டு வேலைக்கு கூப்பிடுகிறோம் என்று மட்டும் சொல்லுகிறார்கள் । இது ஒரு கண்துடைப்பாக மட்டுமே உள்ளது ।ஆதலால் இதை உங்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்ற்க்காகவே எங்களது பதிவை பதிவிடுகிறோம்। இதற்கான தகுந்த நடவடிக்கை எடுத்து பட்டதாரிகளுக்கு வேலை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory